சிறுபான்மையினர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகள், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி நிலையங்கள், உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காகவும், கட்டுமான விரிவாக்க பணிகளுக்கும், விடுதி கட்டடங்களுக்காகவும் அதிகபட்சம் ரூ. 50 லட்சம் வரை நிதி உதவி.
தகவல்களுக்கு: www.maef.nic.in
சிறுபான்மை மாணவ மாணவிகள் மத்திய மாநில அரசுகள் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் முதல் நிலைப்படியில் வெற்றி பெற்றால் உதவி தொகை.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் வெற்றி பெற்றால் ரூ. 1,00,000, மாநில பணியாளர் தேர்வாணையம் மூலம் வெற்றி பெற்றால் ரூ. 50,000, பணியாளர் தேர்வாணையம் மூலம் பெற்றால் m. 25,000 ( DBT Mode)
தகவல்களுக்கு: www.naiudaan-moma.gov.in
அரசு உதவி பெறும் (அ) உதவி பெறாத சிறுபான்மையினர் பயிலும் பள்ளிகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி வகுப்பறைகள், அறிவியல் கூடம், கணினியரை, நூலகம், கழிப்பறை, குடிநீர் 13 வசதிகள், விடுதிகள் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்காக 75% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை நிதி உதவி கல்வி
தகவல்களுக்கு: www.mhrd.gov.in
பின் தங்கிய சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில், அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதிகள், கழிப்பறை, கான்கிரீட் வீடுகள், மின்சார வசதி, திறன் வளர்ப்பு பயிற்சிகள் பகுதிகளை மேம்படுத்துதல்.
குறிப்பு: மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையின் குழுவின் அடிப்படையில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகிறது
சிறுபான்மை மக்களின் பாரம்பரிய கலை மற்றும் கைவினை திறனை ஊக்குவிப்பதற்காக பயிற்சி அளித்தல்
தொடர்புக்கு: www.usttad.minorityaffairs.gov.in
11, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, இளநிலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவ மாணவிகளின் கல்வி உதவித் தொகை வருடத்திற்கு ரூ. 3,000 முதல் ரூ. 10,000 வரை வழங்கப்படுகிறது மற்றும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ. 350 முதல் ரூ. 570 வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு: மாணவ மாணவிகள் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரி அலுவலகம் / www.scholarships.gov.in
1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு: மாணவ மாணவிகள் படிக்கும் பள்ளி அலுவலகம் / www.scholarships.gov.in
சிறுபான்மை மாணவ மாணவிகள் M.Phil Or Ph.D பயில்வதற்காக மத்திய அரசு கல்வி உதவித் தொகையாக, JRF க்கு முதல் இரண்டு வருடத்திற்கு மாதம் ரூ. 25,000 முதல் ரூ. 31,000 மற்றும் SRF முதல் மூன்று வருடங்களுக்கு ரூ. 28,000 முதல் ரூ. 35,000 வரை மாதம் வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு: மாணவ மாணவிகள் பயிலும் கல்லூரிகள் / www.scholarships.gov.in
9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கு மாணவிகளுக்கு வருடம் ரூ. 5,000 மற்றும் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு வருடம் ரூ. 6,000
தொடர்புக்கு: மாணவ மாணவிகள் பயிலும் பள்ளி அலுவலகம் / www.scholarships.gov.in
மத்திய அரசினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 85 உயர் கல்வி நிறுவனங்களில்: Technical, Non Technical, and Proffesional Courses [UG & PG]
அட்மிஷன் மற்றும் கல்வி கட்டணம் வருடத்திற்கு ரூ. 20,000, வீட்டில் இருந்து படிப்பதற்கு ரூ. 500 மாதம், விடுதியில் தங்கி படிப்பதற்கு ரூ. 1,000 மாதத்திற்கு
தகவல்களுக்கு: www.minorityaffairs.gov.in
அயல்நாட்டில் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்காக கல்வி கடன் அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரை வழங்கப்படும்.
அதற்கான முழு வட்டி தொகையும் மத்திய அரசு வங்கிகளுக்கு செலுத்தும்.
தொடர்புக்கு: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் / www.minorityaffairs.gov.in