சிறு, குறு, உற்பத்தி, சேவை, மீன் வளர்ப்பு, பால் மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு தேனீ வளர்ப்பு, பட்டு நெசவாளர்களுக்கான
மற்றும் வியாபார தொழில் நிறுவனங்களுக்கான ரூ. 50,000 முதல் 10,00,000 வரை பிணையமில்லா கடன் திட்டம்.
தொடர்புக்கு: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் / www.mudra.org.in
தொழில் முனைவோர்களுக்கு, சேவை தொழில்களுக்கு ரூ. 20 லட்சம் வரையிலும், உற்பத்தி தொழில்களுக்கு
ரூ. 50 லட்சம் வரையிலும் வங்கி கடன் வசதி. மத்திய அரசு மானியம் விவரம்: 15% முதல் 35% வரை
தொடர்புக்கு:மாவட்ட தொழில் மையம் / www.kviconline.gov.in/pmegpeportal
சாலையோர வியாபாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் ரூ. 10,000 [ முதல் தவணை ], ரூ. 20,000 [ இரண்டாம் தவணை ], ரூ. 50,000 [ மூன்றாம் தவணை ] என்ற விகித்தில் வங்கி கடன் வசதி. [ 24 : 7% ]
தொடர்புக்கு: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் / www.pmsvanidhi.mohua.gov.in
கிராமப்புறங்களில் வாழும் பின் தங்கிய மக்களுக்கு, இலவச சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டு, சுயதொழில் முனைவோர்களாக உருவாக்குவது [ பயிற்சி + வங்கி கடன் + மானியம்]
தொடர்புக்கு: மாவட்ட முன்னோடி வங்கிகள் [Lead Bank]
18 வகையான கைவினை கலைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு, வங்கி கடன் வசதி வழங்கப்படுகிறது.
முதல் தவணையாக ரூ. 1,00,000 [ 18 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் ] மற்றும் இரண்டாவது தவணையாக ரூ.2,00,000 லட்சம் (30 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்) - வட்டி விகிதம்: 5%
தொடர்புக்கு: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் / பொது சேவை மையம் / www.pmvishwakarma.gov.in
முதலீட்டை எளிதாக்குதல், புத்தாக்க நடவடிக்கைகளை ஊக்குவித்தல், அறிவுத்திறனை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த உற்பத்தி உள்கட்டமைப்பை உருவாக்கல் போன்ற நோக்கங்களைக் கொண்டது 'மேக் இன் இந்தியா' திட்டமாகும்.
27 துறைகளில் 100% அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவித்தல்.
மேலும் தகவல்களுக்கு:www.makeinindia.com
மேலும் தகவல்களுக்கு: பொதுவான சேவை மையம் / www.udyamregistration.gov.in
உள்ளூர் தயாரிப்புகளை ரயில் நிலையங்களில் 15 நாட்கள் விற்பனை நிலையம் அமைத்துக் கொள்ளலாம்.
தொடர்புக்கு: வணிக ஆய்வாளர், ரயில் நிலையம்
பருத்தி மற்றும் பட்டு நூலிழைக்கு 10% முதல் 15% விலை மானியம் பயனாளிக்கு முன்கூட்டியே வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு: www.nhdc.org.in
உணவு பதப்படுத்துதல் துறையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிறுவனங்களை மேன்மைப்படுத்துதல்.
திட்ட மதிப்பீடு ரூ. 30 லட்சம் _ மத்திய அரசு மானியம் விவரம்: 35% வரை ( அ ) அதிகபட்சமாக ரூ. 10,00,000 2
தொடர்புக்கு: மாவட்ட தொழில் மையம் / www.pmfme.mofpi.gov.in
முதல் தலைமுறை இளைஞர்கள் பெறப்படும் தொழில் கடனுக்காக ரூ. 2 கோடி வரை பிணையமில்லாமல் கடன் பெறும் உத்தரவாத திட்டம்.
தொடர்புக்கு: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவது இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம். இதற்காக 12,589 தொழில் முனைவுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு: www.startupindia.gov.in
இளம் தொழில் முனைவோர்களுக்கு நிறுவனம் மற்றும் சார்ந்த அனைத்து திறன் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. www.dcmsme.gov.in/enterprise&skilldevelopment.htm
ஊதுபத்தி தயாரிப்பதற்கான பயிற்சி 10 நாட்களுக்கு இலவசமாக தனிநபருக்கோ அல்லது குழுக்களாகவோ வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு: மாநில இயக்குனர், காதி இயக்கம் / www.kviconline.gov.in
OBC / SC சுய உதவிக் குழுக்கள் (SHGs) அல்லது தனிநபர்களுக்கு வட்டி மானியம் பெறுதல் அதிகபட்ச கடன்: SHGக்கு ரூ.4,00,000 & தனிநபருக்கு ரூ.2,00,000 & அதிகபட்ச மானியத் தொகை: ஆண்டுக்கு 5%
மேலும் தகவல்களுக்கு: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் / கிராம பிராந்திய வங்கிகள் /
https://nsfdc.nic.in/channel-patrners/scas
கயிறு தயாரிக்கும் நிறுவனங்களை அமைப்பதற்கான மானிய திட்டம் பயனாளியின் பங்களிப்பு: 5%, வங்கி கடன் 55%,, மானிய விகிதம் 40% - திட்ட மதிப்பீடு: ரூ.10 லட்சம் வரை
மேலும் தகவல்களுக்கு : https://www.coirservices.gov.in/frm_login.aspx
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள், விவசாயம், சிறு வணிகம், கைவினைஞர் மற்றும் பாரம்பரிய தொழில், போக்குவரத்துத் துறை மற்றும் சேவைத் துறை,
மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் வர்த்தகங்கள் போன்ற வருமானம் ஈட்டும் தொழில்கள் துவங்குவதற்காக ஒரு பயனாளிக்கு ரூ. 15 லட்சம் வரை கடன்
வட்டி விகிதம்: ரூ 5.00 லட்சம் வரை கடன்: ஆண்டுக்கு 6%
ரூ. 5.00 லட்சத்திற்கு மேல் ரூ. 10.00 லட்சம் வரை கடன்: ஆண்டுக்கு 7%
ரூ. 10.00 லட்சத்திற்கு மேல் ரூ. 15.00 லட்சம் வரை கடன்: ஆண்டுக்கு 8%
தகவல்களுக்கு: 18001023399 / https://nbcfdc.gov.in/sca-list/en / https://nbcfdc.gov.in/bank/en / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோருக்கு ஆண்டுக்கு ரூ. 2,00,000 வரை கடன் வசதி மற்றும் வட்டி மானியம் 5% மேலும் தகவல்களுக்கு : தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் / https://nsfdc.nic.in/channel-patrners/scas
மாவட்ட அளவில் பிரபல பொருட்களை தேர்வு செய்து, அதன் பொருள் சார் தொழிலை ஊக்குவிப்பது.
மானியம்: 35% (அ) அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை
தொடர்புக்கு: மாவட்ட தொழில் மையம் / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
கிராமப்புற பெண்களை குழுக்களாக வடிவமைத்து, சூரிய சக்தியால் இயங்கும் ராட்டை இயந்திரம் மானியத்தின் அடிப்படையில் வழங்குதல்.
தகவல்களுக்கு : https://www.kviconline.gov.in/
கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கு வங்கி சேவைகள் முழுவதுமாக சென்றடைய, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் முகவர்களாக இணைந்து சிறு லாபத்தின் அடிப்படையில் பணியாற்றலாம்.
தொடர்புக்கு: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்
பொது சேவை மையம் அமைத்து அதன் மூலம் மத்திய மாநில அரசு திட்டங்களையும், தனியார் நிறுவன சேவைகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் சுய தொழில் மையம்.
தகவல்களுக்கு : https://www.csc.gov.in/
வங்கிக் கடன் வட்டி விகிதம்: 6% மற்றும் திட்ட மதிப்பீட்டில் 20% மானியம்
தொடர்புக்கு: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் / http://www.ipowertexindia.gov.in/
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சுகாதார பணியாளர்கள், குப்பை சேகரிப்பவர், போன்ற விளிம்பு நிலை மனிதர்களுக்கு உரிய தொழிற்பயிற்சி, ஊக்க தொகை மாதம் ரூ. 1,500 முதல் ரூ. 3,000 அளித்து அவர்களது பொருளாதாரம் வாழ்க்கையை மேம்படுத்துவது தொடர்புக்கு : http://www.pmdaksh.dosje.gov.in/