மத்திய அரசின்

பட்டியல் மற்றும் பழங்குடியினர் திட்டங்கள்

  1. பெண் தொழில் முனைவோர்களுக்கான ஸ்டாண்ட் அப் திட்டம் ( Stand Up Mitra):

    SC ST மற்றும் பெண் தொழில் முனைவோர்கள், புதியதாக தொழில் நிறுவனங்களை துவங்க ரூ. 10,00,000 முதல் ஒரு கோடி வரை கூட்டுக்கடன் வசதி.
    தொடர்புக்கு: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் / www.standupmitra.in

  2. SC மக்களுக்கான வாழ்வாதார நுண்கடன் திட்டம்:

    சிறு / குறு வணிக நடவடிக்கைகளுக்கு, வங்கி அல்லாத நிறுவனங்கள் மூலம் நியாயமான வட்டி விகிதத்தில் தகுதியுள்ள அட்டவணை நபர்களுக்கு நுண்கடன் வழங்குதல்.
    திட்டச் செலவில் 90% வரை நிதி உதவி ரூ. 1,40,000 & வட்டி விகிதம்: ஆண்களுக்கு 11% & பெண்களுக்கு 10%
    மேலும் தகவல்களுக்கு: https://nsfdc.nic.in/channel-patrners/

  3. SC ST SCA பிரிவினருக்கான Pre Metric கல்வி உதவித்தொகை திட்டம்:

    1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு வருடம் ரூ. 1,000 மற்றும் 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வருடம் ரூ. 5,000 கல்வி உதவி தொகை திட்டம்.
    தொடர்புக்கு: மாணவ மாணவிகள் படிக்கும் பள்ளி அலுவலகம் / www.scholorships.gov.in

  4. SC ST SCA பிரிவினருக்கான Post Metric கல்வி உதவித்தொகை திட்டம்:

    ITI, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல், பொறியியல், MBA, MCA, ME, M.Tech, Nursing, Pharmacy, Siddha, BDS, MBBS, ஆயுர்வேதிக் போன்ற பல படிப்புகளுக்கு வருட கல்வி உதவித் தொகையாக ரூ. 1,500 முதல் ரூ. 4,50,000 வரை வழங்கப்பட்டு வருகிறது.
    தொடர்புக்கு: மாணவ மாணவிகள் படிக்கும் கல்லூரி அலுவலகம் / www.scholorships.gov.in

  5. SC ST SCA மாணவர்களுக்கான வெளிநாடு கல்வி கனவு திட்டம் [ NOS ]:

    கல்லூரி படிப்பை முடித்து, வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கலாம்.
    மேலும் தகவல்களுக்கு: www.nosmsje.gov.in

  6. பாரதப் பிரதமரின் பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் [NSIGSE]:

    8 ஆம் வகுப்பு முடித்து 9 ஆம் வகுப்பு செல்லும் SC ST SCA பிரிவினரை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு ரூ. 3,000 வைப்பு தொகை மற்றும் அப்பெண் குழந்தை 18 வயது அடைந்த பிறகு வைப்புத்தொகையுடன் கூடிய வட்டியை பெற்றுக் கொள்ளலாம்.
    தொடர்புக்கு: படிக்கும் பள்ளி அலுவலகம் / www.scholarships.gov.in

  7. பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா :

    SC மாணவ மாணவிகளுக்கான தங்கும் விடுதி ஏற்படுத்தி தருதல்.
    மேலும் தகவல்களுக்கு: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்.