மத்திய அரசின்

விவசாயம் மற்றும் கால்நடை திட்டங்கள்

  1. விவசாயிகளுக்கான ரூ. 6,000 நிதி உதவி மையம் [ PM Kisan ]:

    தகுதியுள்ள சிறு குறு விவசாயிகளுக்கு ஆதரவாக வருடம் ரூ. 6,000 நிதியை நேரடியாக வங்கிக் கணக்குக்கு வழங்கும் திட்டம்.

  2. வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் [ PMEGP ] [ கால்நடை]:

    மாட்டுப் பண்ணை, ஆட்டுப்பண்ணை, கோழி பண்ணை அமைத்து, புதிய கால்நடை தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பது.
    கால்நடை பண்ணைகளுக்கு அதிகபட்சமாக ரூ. 20,00,000 வரை கடன் வழங்குதல் மற்றும் 15% முதல் 35% வரை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது
    தொடர்புக்கு:மாவட்ட தொழில் மையம் / www.kviconline.gov.in/pmegpeportal

  3. கிசான் கிரெடிட் கார்டு [KCC]:

    கறவை மாடு, ஆடு, கோழி, மீன்கள் பராமரித்தல் மற்றும் இதர விவசாய தேவைகளுக்காக ரூ. 1,60,000 வரை பிணையம் இல்லா வங்கி கடன் வசதி திட்டம். ( வட்டி விகிதம் 7%)
    மத்திய அரசு 1.5% வட்டி மானியம் வழங்குகிறது.
    தொடர்புக்கு: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்

  4. தேசிய கால்நடை இயக்கம் [ NLM ] [ திட்ட மதிப்பீட்டில் 50% மானியம் ]

    தேசிய கால்நடை திட்டத்தின் இயக்கத்தின் கீழ் புறக்கடை கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக இரண்டு தவணைகளாக ரூ. 10,00,000 முதல் ரூ. 50,00,000 வரை மானியம்.
    செம்மறியாடு ஆடு (அ) வெள்ளாடு வளர்ப்புக்காக
    100 எண்ணிக்கைக்கு ரூ.20 லட்சம்,
    200 எண்ணிக்கைக்கு ரூ. 40 லட்சம், 300 எண்ணிக்கைக்கு ரூ. 60 வட்சம்,
    400 எண்ணிக்கைக்கு ரூ. 80 லட்சம், 500 எண்ணிக்கைக்கு ஒரு கோடி
    பன்றி வளர்ப்பு (100 எண்ணிக்கை) திட்ட மதிப்பீடு ரூ. 60 லட்சம் மானியம் ரூ. 30 லட்சம்
    நாட்டுக்கோழி (1000 எண்ணிக்கை) திட்ட மதிப்பீடு ரூ. 50 லட்சம் மானியம் ரூ. 25 வட்சம்
    தொடர்புக்கு: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம் / www.nlm.udyamimitra.in

  5. கறவை மாடு வளர்ப்பு மற்றும் ஆடு வளர்ப்பு கடன் திட்டம்: [ Dairy Loan ]

    விவசாயிகள் மாடுகள் [02 எண்ணிக்கை ] மற்றும் ஆடுகள் [201 எண்ணிக்கை ] வளர்ப்பதற்காக வங்கி கடன் திட்டம். தொடர்புக்கு:தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்

  6. விவசாயிகள் செழுமை மையம் (PMKSY):

    விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள், மற்றும் விவசாய பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில், மானியம் உட்பட நியாயமான விலையில் விற்பனை செய்யும் நிலையம்.
    தொடர்புக்கு: அருகில் உள்ள விவசாய செழுமை விற்பனை நிலையங்கள்

  7. தேசிய பயிர் காப்பீடு திட்டம் (PMFBY):

    எதிர்பாராமல் நடக்கும் இயற்கை சீற்றத்தால், ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு காப்பீடு மூலம் உரிய நிவாரணம் வழங்குதல்.
    தொடர்புக்கு: வேளாண்மை துறை / பொது சேவை மையம் / www.pmfby.gov.in

  8. தேசிய இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் (PKVY):

    2.5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு, இயற்கை இடுபொருள்கள் வாங்க ரூ. 12,200 [3 வருடத்திற்கு] தொடர்புக்கு: வேளாண்மை துறை / தோட்டக்கலை துறை

  9. கால்நடை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி உதவி திட்டம் [AHIDFS]:

    கால்நடை மற்றும் கால்நடை சம்பந்தப்பட்ட தொழில்கள், பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் நிறுவனங்களுக்கு மேம்படுத்துவதற்காக அல்லது புதிதாக உருவாக்குவதற்காக வங்கி கடன்.
    திட்ட மதிப்பீடு : இரண்டு கோடி வரை வங்கி கடன் மற்றும் வட்டி மானியம்:3%
    தொடர்புக்கு: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் / www.nlm.udyamimitra.in

  10. கால்நடைகளுக்கான தேசிய காப்பீடு மானிய திட்டம் [DAHD]:

    கால்நடைகளுக்கு மானிய விலையில் வழங்கும் திட்டம்
    காப்பீடு மானியம்: வருட சந்தாவில் 50% முதல் 70% வரை
    தொடர்புக்கு: கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம் / www.dahd.nic.in

  11. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் [LHDM]:

    கால்நடைகளுக்கான கோமாரி, புருசெல்லோசிஸ் காய்ச்சல், மற்றும் இதர நோய்களுக்கு முன்னெச்சரிக்கைத்தாக தடுப்பூசிகளை இலவசமாக வழங்குதல்
    தொடர்புக்கு: கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம் / அரசு கால்நடை மருத்துவர்/ www.dahd.nic.in

  12. வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் [AIF]:

    வேளாண் துறையில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், உணவு பண்டங்கள் வீணாவதை பெரும் பகுதி குறைக்கவும், உற்பத்தி பொருட்களை குளிர்சாதன இயந்திரத்தில் பாதுகாப்ப வைப்பதற்காகவம். வேளாண் கட்டமைப்பு நிதி உதவி கடன் திட்டம் வழங்கப்படுகிறது.
    திட்ட மதிப்பீடு: இரண்டு கோடி வரை வங்கி கடன் மற்றும் வட்டி மானியம்: 3%
    தொடர்புக்கு: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் / www.agriinfra.dac.gov.in

  13. பழுதான விவசாய மின் மோட்டார்களை மானிய விலையில் மாற்றி தரும் திட்டம்:

    5 ஏக்கருக்கு குறைவான நிலமுள்ள சிறு குறு விவசாயிகள் 50% [அ] ரூ. 15,000 வரை மானிய விலையில் பழுதான மின் மோட்டார்களை மாற்றிக் கொள்ளலாம் மற்றும் புதிய மின்மோட்டார்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
    தொடர்புக்கு: வேளாண்மை பொறியியல் துறை.

  14. அறுவடைக்குப் பிந்தைய நேர்த்தி இயந்திரங்கள் திட்டம்: [PHTM]

    விவசாயிகள் அறுவடைக்குப் பிந்தைய வேளாண் பொருட்களை, மதிப்பு கூட்டு பெற்று நல்ல விலைக்கு விற்பனை செய்ய, விவசாய இயந்திரங்கள் மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். மானிய விவரம்: 40% முதல் 60% வரை.
    தொடர்புக்கு: வேளாண்மை பொறியியல் துறை.

  15. சூரிய கூடாரம் அமைக்கும் திட்டம் [Solar Dryer ]:

    சூரிய சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாய பொருட்களை மதிப்பு கூட்டலுக்காகவும், சூரிய கூடார உலர்த்தி 400 ச.அடி முதல் 1,000 சதுர அடி வரை அமைத்துக் கொள்ளலாம். மானிய விவரம்: 40% முதல் 60% வரை [ அதிகபட்ச மானியம் ரூ. 3,50,000 ]
    தொடர்புக்கு: வேளாண்மை பொறியியல் துறை.

  16. சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட் மானியத்தில் வழங்கும் திட்டம்:

    விவசாயிகள் மின்சார நுகர்வை குறைத்து, சூரிய ஒளி மின் பம்பு செட்டு அமைத்து வருமானத்தை பெருக்குவதற்கான திட்டம்.
    மானிய விவரம்: 60% முதல் 70% வரை.
    தொடர்புக்கு: வேளாண்மை பொறியியல் துறை.

  17. வேளாண் மதிப்பு கூட்டு இயந்திர சேவை மையம் அமைக்கும் திட்டம் [PHTM]:

    விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் விவசாய பொருட்களை, மதிப்பு கூட்டு பணிக்காக அவரவர் கிராமத்திலேயே, விவசாய இயந்திர சேவை மையம் அமைத்துக் கொள்ளுதல்
    மானிய விவரம்: விவசாய சேவை மையம் அமைத்துக் கொள்ள 50% மானியம் (அ) அதிகபட்சமாக em. 5,00,000
    தொடர்புக்கு: வேளாண்மை பொறியியல் துறை.

  18. வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாடகை மையம் [BLCHC]:

    ஒன்றிய அளவில் வேளாண் இயந்திரங்கள் சேவை மையம் அமைப்பதற்காக அதிகபட்சமாக மானியம் ரூ 10 லட்சம்
    திட்ட மதிப்பீடு: 25 லட்சம் [40% மானியம் ]
    திட்ட வைப்பு தொகை: SC ST SCA மக்களுக்கு ரூ.2,00,000, BC MBC OC மக்களுக்கு ரூ. 5,00,000 [2 வருடங்கள் ]
    தொடர்புக்கு: வேளாண்மை பொறியியல் துறை.

  19. வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாடகை மையம் [VLCHC]:

    குறைந்தது 8 பேர் கொண்ட விவசாய குழு அமைக்க வேண்டும்
    கிராமப்புற அளவில் வேளாண் இயந்திரங்கள் சேவை மையம் அமைப்பதற்காக மானியம் ரூ. 8 லட்சம்
    திட்ட மதிப்பீடு: ரூ. 10 லட்சம்
    திட்ட வைப்பு தொகை: SC ST SCA மக்களுக்கு ரூ. 1,00,000, BC MBC OC மக்களுக்கு ரூ. 2,00,000 [2 வருடங்கள் ]
    தொடர்புக்கு: வேளாண்மை பொறியியல் துறை.

  20. வேளாண் நீர்ப்பாசன திட்டம் [ PMKSY ]:

    விவசாயிகள் பம்பு செட் அமைக்க, மோட்டார், பைப்லைன், ஆழ்துளை கிணறு மற்றும் நீர் பாசனத்திற்கு தேவையான அனைத்து கருவிகளையும் வாங்குவதற்காக மானியம் வழங்கப்படுகிறது.
    மானிய விவரம்: 75% முதல் 100% வரை ( விதிமுறைக்கு உட்பட்டது)
    தொடர்புக்கு: தோட்டக்கலை துறை.

  21. விவசாயிகளுக்கான விமான சேவை திட்டம் [ Krishi UDAN]:

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த, எளிதில் அழுகி போகக்கூடிய பொருட்களை, விமானத்தின் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு குறைவான கட்டணத்தில் ஏற்றுமதி செய்தல்.
    தொடர்புக்கு: அருகிலுள்ள விமான சரக்கு நிலையம்.

  22. மண்வள பரிசோதனை அட்டை திட்டம் [Soil Health Card]:

    விவசாயிகள் தங்களது மண் தரத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி விவசாய பொருட்களை உற்பத்தி செய்து வருமானத்தை பெருக்குவதற்காக மத்திய அரசால் மண்வள பரிசோதனை திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
    தொடர்புக்கு: மாவட்ட அரசு மண் பரிசோதனை கூடம் / வேளாண் துறை / www.soilhealth.dac.gov.in

  23. விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி திட்டம் (ATMA):

    விவசாயிகளுக்கு 1 நாள் [ மாவட்ட அளவில் பயிற்சி ],
    3 நாள் [ தமிழ்நாடு அளவில் பயிற்சி ],
    5 முதல் 7 நாள் [ வெளி மாநில பயிற்சி ]
    இதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களை குறித்து கண்டுணர்வு சுற்றுலா பயிற்சி அளிக்கப்படுகிறது.
    தொடர்புக்கு: வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகம் / வேளாண்மை துறை

  24. விவசாயிகளுக்கான விளைபொருள் வாகன வசதி திட்டம் [ KRY ]:

    விவசாய பொருட்களை நாடு முழுவதும் குறைவான கட்டணத்தில், வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லலாம்.
    தொடர்புக்கு: www.kisanrath.nic.in

  25. தேசிய வேளாண் சந்தை திட்டம் ( eNAM):

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விவசாய பொருட்களை இணையதளத்தில் இடைத்தரர்கள் இல்லாமல் நேரிடையாக வணிகர்களுக்கு விற்பனை செய்யலாம்.
    மேலும் தகவல்களுக்கு: ஒழுங்குமுறை விற்பனை கூடம்/ www.enam.gov.in

  26. விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் திட்டம் [MSP]:

    கரிஃப் பயிர்கள் சந்தை வீழ்ச்சியின் போது அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையில் மாநில முகமை நிலையங்கள் கொள்முதல் செய்து கொள்ளும்.
    தொடர்புக்கு: இந்திய உணவுக் கழகம் / மாநில சிவில் சப்ளை கார்ப்பரேஷன் லிமிடெட் கொள்முதல் மையங்கள்.

  27. ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் [ RAD IFS ]:

    மானாவரி பகுதி விவசாயிகளுக்கு காய்கறி விதைகளுக்கு ரூ. 5,000 [ எக்டர் ], கறவை மாடு / எருமை மாடு வாங்க ( ஒரு எண்கள் ) (அ) ஆடு / செம்மறி ஆடு வாங்க (5 எண்கள்) ரூ. 15,000,
    தற்காலிக மண்புழு படுக்கை ரூ. 8,000, தோட்டக்கலை செடிகள் ரூ. 400,
    தேனீ பெட்டி ரூ. 1,600 [ யூனிட் ] ஆகிய விவசாய பொருட்கள் வாங்க மானியமாக ரூ.30,000 வழங்கப்படுகிறது.
    தொடர்புக்கு: வேளாண்மை துறை / தோட்டக்கலை துணை துறை.

  28. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் [NADP]:

    விவசாயத்திற்காக மானிய தொகையில் நடவுகள் மற்றும் ஆற்றல் வழங்குதல் [ குறிப்பு ஒரு ஹெக்டருக்கு ]
    பப்பாளிக்கு ரூ.23,100, கொய்யா ரூ. 9,202, தர்பூசணி ரூ.10,000, நெல்லி சாதாரண நடவு ரூ. 14,400,
    எலுமிச்சை சாதாரண நடவு ரூ. 13,195, உதிரி மலர்கள் சாகுபடி ரூ. 16,000,
    தக்காளி குழித்தட்டு, கத்தரி, மற்றும் மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் ரூ 20,000,
    சுவை தாளித்த பயிர் மிளகாய் ரூ. 12,000, டிராகன் பழம் ரூ. 96,000,
    சிறிய வெங்காயம் பரப்பு விரிவாக்கம் ரூ.20,000,
    பல்லாண்டு முருங்கை பரப்பு விரிவாக்கம் ரூ. 20,000,
    செடி முருங்கை பரப்பு விரிவாக்கம் ரூ. 10,000, நிரந்தர முறையில் சாகுபடி ரூ. 2,00,000, நிலப் போர்வை ரூ.16,000
    தொடர்புக்கு: தோட்டக்கலைத் துறை.

  29. மூங்கில் வளர்ப்பு திட்டம் [NBM]:

    மூங்கில் நாற்று மற்றும் தேவையான இடு பொருள்கள் மானியமாக வழங்குதல்.
    விவசாயிகளுக்கான மானியம்: 1 ஒரு ஏக்கருக்கு ரூ. 10,000 மானியம், 2.5 ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ. 25,000
    பொது மானியம் [ பள்ளி கல்லூரிகள் நிறுவனங்கள் பஞ்சாயத்து அளவில் ] 1 ஒரு ஏக்கருக்கு ரூ.20,000 மானியம், 2.5 ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ. 50,000
    தொடர்புக்கு: தோட்டக்கலைத் துறை / www.nbm.nic.in

  30. தேசிய வேளாண்மை துவரை உற்பத்தி வளர்ச்சி திட்டம்:

    துவரையை நடவு முறையில் சாகுபடி செய்வதற்காக மானியம் ரூ. 6,000 [ ஒரு ஹெக்டருக்கு ]
    தொடர்புக்கு: வேளாண்மை துறை.

  31. தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் [ FNS ]:

    விவசாயிகள் சிறுதானியம் மற்றும் பயிர் வகைகளில் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில் செயல் விளக்கத்திடல் அமைத்திட ஹெக்டருக்கு சிறுதானியத்திற்கு ரூ. 6,000 மற்றும் பயிர்க்கு ரூ. 7,500 மானியம்.
    மேலும் விதைகள், திரவ உயிர் உயிர்கள், இயற்கை உரங்கள், பயிர் பாதுகாப்பு காரணிகள், ஆகிய இடுபொருட்கள் வாங்க 50% மானியம்.
    தொடர்புக்கு: வேளாண்மை துறை.

  32. விவசாயிகளுக்கான பாரத் ஆர்கானிக்:

    இதன் கீழ், துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, சர்க்கரை, பாசுமதி அரிசி உள்ளிட்ட ஆறு ஆர்கானிக் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. [ எதிர்காலத்தில் பொருட்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் ]
    இது ஒரு கூட்டுறவு அமைப்பாகும், இதில் வரும் லாபம் 50% கூட்டுறவு உறுப்பினரான விவசாயிகளுக்கு திருப்பி அளிக்கப்படும்.
    தொடர்புக்கு: விவசாயிகள் கூட்டுறவு அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

  33. விவசாயத்திற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் [ MGNREGA ]:

    கிராமப்புறங்களில் கல்வரப்பு, மண்வரப்பு, ஆட்டு கொட்டகை, மாட்டு கொட்டகை, கிணறு, பண்ணை குட்டை அமைத்தல், மழை நீர் உறிஞ்சி அமைத்தல், போன்ற விவசாய தேவைகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது.
    தொடர்புக்கு: ஊராட்சி அலுவலர் BDO / பஞ்சாயத்து அலுவலகம்