மத்திய அரசின்

மீனவர் நலத்திட்டங்கள்

  1. மீனவர்களுக்கான முத்ரா கடன் திட்டம் [ Mudra _ Fisherman]:

    மீனவர்கள் குழுக்களாக அமைந்து புதியதாக இயந்திர படகுகள் வாங்க ரூ 1 கோடி வரை வங்கி கடன் வசதி
    தொடர்புக்கு: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்

  2. கடல் மீனவர்களுக்கான தேசிய சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் (NFSRS) :

    மீனவர் ஒருவருக்கு ரூ.4,500 நிதி உதவி வழங்குதல் [மீன்பிடி தடைக்காலத்தின் போது ]
    மாநில அரசின் பங்கு ரூ. 1,500, மத்திய அரசின் பங்கு ரூ. 1,500 மற்றும் மீனவர்களின் சேமிப்பு சேமிப்பு பங்கு தொகை ரூ. 1500
    தொடர்புக்கு: AD, மீன்வளத்துறை

  3. பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் - மீனவர் சமூகத்திற்கு மட்டும்:

    ஒரு வீட்டிற்கு ரூ.1,20,000 மானியம் வழங்குதல் [ வீடு குறைந்தபட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவு ]
    தொடர்புக்கு: AD அலுவலகம், மீன்வளத்துறை

  4. வீடு கட்டுங்கள் - மீனவர் சமூகத்திற்கு மட்டும்: (மாநில + மத்திய அரசு திட்டம்):

    மாநில அரசு பங்கு: ரூ.1,10,000/- + மத்திய அரசின் பங்கு: ரூ.60,000/- [ குறைந்தபட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவு ]
    தொடர்புக்கு: AD அலுவலகம், மீன்வளத்துறை

  5. பாரத பிரதமரின் மீனவர்களுக்கான குழாய் கிணறு அமைக்கும் திட்டம்:

    குடிநீர் குழாய் அமைப்பதற்காக ரூ. 50,000 மானியம்
    குறிப்பு: குறைந்தபட்சம் 20 மீனைவ வீடுகள் கொண்ட ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குழாய் கிணறு வழங்கப்பட வேண்டும்.
    தொடர்புக்கு: AD அலுவலகம், மீன்வளத்துறை

  6. பாரதப் பிரதமரின் மீனவர்களுக்கான சமுதாய கூடம் கட்டும் திட்டம்:

    சமுதாயக்கூடம் அமைக்க ரூ. 4,00,000 லட்சம் மத்திய அரசு உதவி
    தொடர்புக்கு: AD அலுவலகம், மீன்வளத்துறை

  7. பாரதப் பிரதமர் மீனவர்களுக்கான கூட்டு விபத்து காப்பீடு திட்டம்:

    காப்பீட்டு தொகை ஒரு மீனவருக்கு ஆண்டுக்கு ரூ 20.34
    உரிமம் பெற்ற / பதிவு செய்யப்பட்ட மீனவர்கள் இறப்பு அல்லது நிரந்தர மொத்த ஊனத்திற்கு ரூ 2,00,0000
    பகுதி ஊனத்திற்கு ரூ. 1,00,0000 மற்றும் ரூ. 10,000 மருத்துவமனை செலவுக்காக.
    தொடர்புக்கு: AD அலுவலகம், மீன்வளத்துறை

  8. பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY):

    2023-2024 மத்திய பட்ஜெட்டில், மீன் விற்பனையாளர்கள், மீனவர்கள் மற்றும் குறு மற்றும் சிறு தொழில்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், சந்தையை விரிவுபடுத்தவும், ரூ.6,000 கோடி முதலீட்டில் PMMSY இன் கீழ் புதிய துணைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும் தகவல்களுக்கு: மீன்வளத்துறை