மத்திய அரசின்

அனைவருக்கும் பொதுவான திட்டங்கள்

  1. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் [PMAY ] [ நகராட்சி, மாநகராட்சி பேரூராட்சி]:

    புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ. 2,10,000 மானியம் [ 400 ச.அடி ]
    தொடர்புக்கு: தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரிய அலுவலகம்.

  2. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் [ PMAY - Apartment ]:

    அரசு அடுக்குமாடி குடியிருப்பில் மானிய விலையில் வீடு சொந்தமாக வாங்கலாம்.
    தொடர்புக்கு: தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரிய அலுவலகம்.

  3. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் [PMAY ] [ஊராட்சி]:

    புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ. 2,10,000 முதல் ரூ. 2,70,000 வரை மானியம் [ 400 ச.அடி ]
    தொடர்புக்கு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை

  4. தூய்மை இந்தியா திட்டம் [ Swachh Bharath Mission ]:

    கிராமங்களில் புதியதாக கழிப்பறை கட்ட மானியம்: ரூ. 12,000
    தொடர்புக்கு: வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO)

  5. இலவச எரிவாயு இணைப்பு திட்டம் [ Ujjwala Yojana ]:

    பெண்களுக்கான மானிய விலையில் கேஸ் இணைப்பு.
    தொடர்புக்கு: பாரத் கேஸ், இன்டேன் கேஸ், HP கேஸ் அலுவலகங்கள் / https://www.pmuy.gov.in/

  6. கிராமப்புற மக்களுக்கு இலவச கணினி பயிற்சி திட்டம் [PMGDISHA ]:

    தொடர்புக்கு: பொது சேவை மையங்கள்

  7. இணைய வழி இலவச சட்ட ஆலோசனை [ Tele Law ]:

    தொடர்புக்கு: பொது சேவை மையம் /www.tele-law.in

  8. தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் திட்டம் [ E Shram]:

    சிறு குறு கூலித் தொழிலாளர்களுக்கான மாபெரும் மத்திய அரசு திட்டம்
    தொடர்புக்கு: பொது சேவை மையம் / www.eshram.gov.in

  9. அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் [PMJDY]:

    ரூ. 0 வைப்புத் தொகை கொண்ட இலவச வங்கிக் கணக்குகள் துவங்குவதற்கு.
    தொடர்புக்கு: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்

  10. மானிய விலையில் LED பல்புகள் விற்பனை திட்டம் [ Ujala Yojana ]:

    LED பல்புகள் 9 வாட் முதல் 50 வாட் வரை மானிய விலையில் வாங்கலாம்.
    தொடர்புக்கு: தமிழ்நாடு அரசு மின்சார அலுவலகம் அல்லது அருகில் அமைந்துள்ள Ujala LED விற்பனை அலுவலகம்

  11. தரிசு நிலங்களில் சூரிய வேளாண்மை திட்டம் [KUSUM ]:

    மத்திய அரசு மானியம் 70% அடிப்படையில், விவசாய நிலங்களில் சூரிய மின்சார உற்பத்தி தயாரித்தல்.
    தொடர்புக்கு: www.kusumscheme.com / Toll Free: 1800 180 3333

  12. பணிபுரியும் பெண்களுக்கான விடுதி வசதி திட்டம்:

    கணவரால் கைவிடப்பட்டோர், தனியாக வாழும் பெண்கள், சமுதாயத்தில் பின்தங்கிய பெண்கள், தங்களது 5 வயது குழந்தையுடன், குறைவான கட்டணத்தில் 3 வருடங்கள் முதல் 5 வருடங்களுக்கு மிகாமல் விடுதியில் தங்கி பணிக்கு செல்லலாம்.
    தொடர்புக்கு: www.wcd.nic.in

  13. சூரிய சக்தி மேற்கூரை மானிய திட்டம் [Solar ]:

    வீடுகளின் மாடியில் 3 கிலோ வாட் வரை 40% மானியமும், 3 கிலோ வாட் மேல் 20% மானியமும் மத்திய அரசில் வழங்கப்படுகிறது
    தொடர்புக்கு: Tamilnadu Generation And Distribution Corporation / www.solarrooftop.gov.in

  14. நகர்ப்புற மகளிர் சுய உதவி குழு கடன் திட்டம் :

    நகர்ப்புற அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டி மானியம்: 5% [ உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்துவதற்காக]
    தொடர்புக்கு: மகளிர் திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்

  15. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்: [ MGNREGA ]

    கிராமப்புற குடும்பத்திற்கு வீட்டில் ஒருவருக்கு, ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு, ஊதிய வேலைவாய்ப்பை வழங்குவது.
    தொடர்புக்கு: கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள்

  16. தேசிய சமூக உதவித் திட்டம்: [NSAP ]

    குடும்பத்தலைவர் [ 18 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் ] இறந்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 20,000 நிதி உதவி வழங்கப்படுகிறது.
    தொடர்புக்கு: மாவட்ட சமூக நல அலுவலர் (DSWO) / தாலுகா சமூக நல அலுவலர் (TSWO) / www.nsap.nic.in

  17. பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம்:

    அரசு நியாய விலை கடைகளில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குதல். உணவு தானியம் ஒரு நபருக்கு 5 கிலோ, அதிகபட்சமாக 35 கிலோ ( ஒரு குடும்பத்திற்கு)
    தொடர்புக்கு: அரசு நியாய விலை கடைகள்

  18. திருநங்கைகளுக்கான கரிமா கிரே தங்குமிடம் திட்டம்:

    ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட திருநங்கைகளுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் தங்குமிடம்.
    தொடர்புக்கு: https://transgender.dosje.gov.in/Applicant/Registration/ListofNGO

  19. ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா (RVY):

    60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்கிங் ஸ்டிக்ஸ், முழங்கை ஊன்றுகோல், வாக்கர்ஸ், ஊன்றுகோல், முக்காலிகள், குவாட்பாட்கள், கேட்கும் கருவிகள், சக்கர நாற்காலி, செயற்கை பற்கள், கண்ணாடிகள் போன்ற சாதனங்களை ALIMCO என்ற அமைப்பின் மூலம் மருத்துவ அறிக்கையின் படி இலவசமாகப் பெறலாம்.
    தொடர்புக்கு: பொது சேவை மையம் [ALIMCO ]

  20. பாரதப் பிரதமரின் ஒருங்கிணைந்த சேவை மையம் [Toll Free 181][OSC]:

    சமுதாயம் மற்றும் குடும்ப வகையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, சட்டம், மருத்துவம், ஆலோசனை மற்றும் தங்குமிடம் போன்ற தேவைகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது தொடர்புக்கு இலவச
    தொலைபேசி: Toll Free No: 181 / மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை அலுவலகம்

  21. பாரத் ஆட்டா:

    மானிய விலையில் கோதுமை மாவு, கிலோ ரூ.27.50
    800 மொபைல் வேன்கள் மற்றும் 2,000 விற்பனை நிலையங்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும்.
    தொடர்புக்கு: NAFED, NCCF மற்றும் கேந்திரிய பண்டர் ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள்

  22. ஜல் ஜீவன் குடிநீர் இணைப்பு திட்டம்: ( Jal Jeevan)

    கிராமப்புறத்தில் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்குதல்.
    தொடர்புக்கு: வட்டார அலுவலர் [ BDO ], ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை

  23. பஞ்சாயத்து தகவல் செயலி: [ Meri Panchayat ]

    பஞ்சாயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகளின் பணிகள், வரவு செலவுகள் குறித்தும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்
    தகவல்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.meri_panchayat