மத்திய அரசின்

காப்பீடு & சேமிப்பு,ஓய்வூதிய திட்டங்கள்

  1. பொன்மகன் சேமிப்பு திட்டம்:

    ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம். [ 15 ஆண்டுகள் ] வட்டி விகிதம் 7.1%
    தொடர்புக்கு: அஞ்சலகத்துறை.

  2. பொன்மகள் சேமிப்பு திட்டம் [ SSY ]:

    பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம். [ திட்ட காலம்: 21 ஆண்டுகள் ] வட்டி விகிதம் 8%
    தொடர்புக்கு: அஞ்சலகத்துறை.

  3. மாத ஓய்வூதியம் திட்டம் [ APY ]

    60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் திட்டம் [ மாதம் ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை ] தகுதி: 18 வயது முதல் 40 வயது வரை. மாத சந்தா வரைமுறைக்குட்பட்டது.
    தொடர்புக்கு: அஞ்சலகத்துறை

  4. ரூ. 10,00,000 விபத்து காப்பீட்டு திட்டம்:

    18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள். வருட சந்தா ரூ. 299 மற்றும் ரூ. 399 விகிதத்தின் அடிப்படையில்.
    தொடர்புக்கு: அஞ்சலகத்துறை

  5. தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டம் [PMSBY ]

    விபத்து காப்பீடு தொகை ரூ.2,00,000. வருட சந்தா ரூ. 20
    தொடர்புக்கு: அஞ்சலகத்துறை / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்

  6. தனிநபர் ஆயுள் காப்பீட்டு திட்டம் [PMJJBY]

    இயற்கை மரணம் காப்பீடு தொகை ரூ.2,00,000. வருட சந்தா ரூ. 436
    தொடர்புக்கு: அஞ்சலகத்துறை / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்

  7. அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டம்

    கிராமப்புறம், நகரப்புறத்தில் உள்ளவர்களுக்கு குறைந்த பிரிமியம் அதிக போனஸ் அளவிலான காப்பீடு திட்டம். குறைந்தபட்சம் ரூ. 20,000 அதிகபட்சம் ரூ. 50 லட்சம் வரை
    தொடர்புக்கு: அஞ்சலகத்துறை

  8. மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் [ MSSC]:

    குறைந்தபட்சம் ரூ. 1,000 அதிகபட்சம் 10 லட்சம் வைப்புத்தொகை [2 வருடங்கள் ]
    வட்டி விகிதம் 7.5% [3 மாத ] வருடாந்திர கூட்டு வட்டி
    தொடர்புக்கு: அஞ்சலகத்துறை

  9. தங்க பத்திர சேமிப்பு திட்டம் [SGB]:

    ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை & குறைந்தது 5 வருடம் & வட்டி விகிதம்: 2.5%
    தொடர்புக்கு: அஞ்சலகத்துறை / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்

  10. முதியோருக்கான சேமிப்பு திட்டம் [SCSS ] 5 வருடங்கள்:

    60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 8.2% வட்டி அளவில், குறைந்தபட்சம் ரூ. 1,000 அதிகபட்சம் 30 லட்சம் வரை வைப்பு தொகை திட்டம்
    தொடர்புக்கு: அஞ்சலகத்துறை

  11. வருட கால வைப்பு கணக்கு திட்டம் [ Fixed Deposit]:

    ஒரு வருடங்கள் முதல் ஐந்து வருடங்கள் வரை குறைந்தபட்சம் ரூ. 1,000 அதிகபட்சம் ரூ 10 லட்சம் வைப்புத்தொகை
    வட்டி வீதம்: 6.9% முதல் 7.5% வரை கூட்டு வட்டி
    தொடர்புக்கு: அஞ்சலகத்துறை

  12. கிசான் விகாஸ் பத்திரத் திட்டம் [ KVP ]:

    பாதுகாப்பான மற்றும் உச்சபட்ச வரம்பு இல்லாமல் சேமிப்பு முதலீடு திட்டம்.
    குறைந்தபட்சம் ரூ. 1,000 அதிகபட்சம் 10 லட்சம் வைப்புத்தொகை & வட்டி விகிதம்: 7.5%
    தொடர்புக்கு: அஞ்சலகத்துறை

  13. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS):

    நமது வைப்புத் தொகைக்கு எதிரான மாதாந்திர வருமானத் திட்டம்.
    குறைந்தபட்சம் ரூ. 1,000 அதிகபட்சம் ரூ. 9 லட்சம் வைப்புத்தொகை வட்டி 7.4%
    தொடர்புக்கு: அஞ்சலகத்துறை

  14. முதியோர்களுக்கான மாத ஒய்வு ஊதிய திட்டம் (IGNOAP ):

    பொருளாதாரத்தில் பின்தங்கிய 60 வரை வயதை கடந்த முதியோர்களுக்கு ரூ. 1,200 மாத ஓய்வூதியம் பெறலாம்
    தொடர்புக்கு: பொது சேவை மையம் / சமூக பாதுகாப்பு திட்டம் / www.nsap.nic.in

  15. கணவனை இழந்த பெண்களுக்கு மாத ஒய்வு ஊதிய திட்டம் (IGNWPS ):

    40 வயதிற்கு மேற்பட்ட, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட, கணவனை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு ரூ. 1,200 மாத ஓய்வூதியம் பெறலாம்.
    தொடர்புக்கு: பொது சேவை மையம் / சமூக பாதுகாப்பு திட்டம் / www.nsap.nic.in

  16. மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வு ஊதிய திட்டம் (IGNDPS ):

    பொருளாதாரத்தில் பின்தங்கிய, 18 வயதிற்கு மேற்பட்ட, 80% உடல் ஊனமுற்றதற்கான சான்றிதழ் பெற்ற மாற்று திறனாளர்களுக்கு ரூ. 1,200 மாத ஒய்வூதியம் பெறலாம்.
    தொடர்புக்கு: பொது சேவை மையம் / சமூக பாதுகாப்பு திட்டம் / www.nsap.nic.in

  17. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மாத ஒய்வூதிய திட்டம் (PMSYM):

    18 வயது முதல் 40 வயது வரை உள்ள, அமைப்புசாரா தொழிலாளர்கள், ரூ. 55 முதல் ரூ. 200 வரை மாத சந்த அடிப்படையில், 60 வயதுக்கு மேல் ரூ. 3,000 மாத ஒய்வு திட்டம்.
    குறிப்பு: நாம் செலுத்தும் சந்தா தொகைக்கு நிகரான தொகை, மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.
    தொடர்புக்கு: பொது சேவை மையம் / www.maandhan.in

  18. விவசாயிகளுக்கான மாத ஒய்வூதிய திட்டம் ( PMKMY ):

    18 வயது முதல் 40 வயது வரை உள்ள, சிறு குறு விவசாயிகள், ரூ. 55 முதல் ரூ. 200 வரை மாத சந்த அடிப்படையில், 60 வயதுக்கு மேல் ரூ. 3,000 மாத ஒய்வு திட்டம்.
    குறிப்பு: நாம் செலுத்தும் சந்தா தொகைக்கு நிகரான தொகை, மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.
    தொடர்புக்கு: பொது சேவை மையம் / www.pmkisan.gov.in/www.maandhan.in

  19. சிறு குறு வியாபாரிகளுக்கான மாத ஓய்வூதிய திட்டம் (PMLVMY):

    18 வயது முதல் 40 வயது வரை உள்ள, சிறு குறு வியாபாரிகள், ரூ. 55 முதல் ரூ. 200 வரை மாத சந்த அடிப்படையில், 60 வயதுக்கு மேல் ரூ. 3,000 மாத ஒய்வு திட்டம்.
    குறிப்பு: நாம் செலுத்தும் சந்தா தொகைக்கு நிகரான தொகை, மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.
    தொடர்புக்கு: பொது சேவை மையம் / www.maandhan.in